Home / சினிமா / ஹாலிவுட் /

நடிப்பதற்கு முன் ஹாலிவுட் நடிகை சல்மா ஹாயக் பார்த்த வேலை என்ன தெரியுமா?

Posted On : April 29, 2017
மெக்சிகோவில் பிறந்து ஹாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகையாகத் திகழ்பவர் சல்மா ஹாயக். ஹாலிவுட் சூப்பர் ஹிட் படமான ‘ஸ்பை கிட்ஸ் 3டி: கேம் ஓவர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, இந்திய ரசிகர்களால் நன்கு அறியப்பட்டார்.

இதுமட்டுமில்லாமல் முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் பியர்ஸ் பிராஸ்னன் ஜோடியாக ‘ஆஃப்டர் தி சன் செட்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

அந்தப் படத்தில் இவருக்கும் பியர்ஸ் பிராஸ்னனுக்கும் இடையே கடற்கரையில் நிகழும் காதல் காட்சியில் மேலாடை இன்றி நிர்வாணக் கோலத்தில் நடித்து ரசிகர்களை சூடேற்றி இருப்பார்.

மேலும் சில ஹாலிவுட் படங்களில் படுக்கையறைக் காட்சிகளிலும், முத்தக் காட்சிகளிலும் பட்டையைக் கிளப்பி இருப்பார்.

இந்த நிலையில், நடிகையாவதற்கு முன் சல்மா என்ன வேலை செய்தார் என்பது குறித்த தற்போது தெரியவந்துள்ளது.

மெக்சிகோவைச் சேர்ந்த ஹாயக், அந்நாட்டு மொழியை விடியோவில்  கற்பிக்கும் ஆசிரியாகத் திகழ்ந்திருக்கிறார். இதுதொடர்பான விடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

மெக்சிகோ மொழியின் வார்த்தைகளில் சிலவற்றை, எப்படி உச்சரிப்பது என்பது குறித்து அவர் விளக்குவது போன்று விடியோ அமைந்துள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்