Home / உலகம் / அவுஸ்ரேலியா /

ஹாக்கி: ஆஸி.,யிடம் வீழ்ந்தது இந்தியா

Posted On : May 2, 2017

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 1–3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

 

மலேசியாவின் இபோ நகரில், 26வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இன்று நடந்த மூன்றாவது லீக் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை சந்தித்தது.

 

போட்டியின் 26வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார். இதற்கு, ஆஸ்திரேலியா சார்பில் எடி(30வது நிமிடம்) பதிலடி தந்தார். தன் பங்கிற்கு ஆஸ்திரேலியாவின் டாம் (34) கோல் அடித்தர். தொடர்ந்து அசத்திய ஆஸ்திரேலிய அணிக்கு விகாம் (51) ஒரு கோல் அடித்து வலுவாக்கினார். கடைசி வரை போராடிய இந்திய அணியால் கூடுதலாக ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில், இந்திய அணி 1–3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

Comments

தொடர்புடைய செய்திகள்