Home / உலகம் / ஜேர்மனி /

ஜேர்மனியில் அகதி கொடூரமாக அடித்துக் கொலை: நால்வர் மீது வழக்கு விசாரணை

Posted On : May 3, 2017

ஜேர்மனியில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அகதி ஒருவரை கொடூரமாக தாக்கிய வழக்கில் நான்கு பேர் குற்றவாளிகள் என தெரியவந்துள்ளது.

ஜேர்மனியின் Waldbröl நகரிலேயே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் குடிபோதையில் இருந்த நால்வர் அகதியை தாக்கும் நோக்கில் Waldbröl நகருக்கு வந்துள்ளனர்.

அங்கே 40 வயது மதிக்கத்தக்க கஜகஸ்தானை சேர்ந்த Klaus B என்ற நபரை பார்த்தவுடன், நால்வரும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

தலையில் கொடூரமாக அடித்ததால் மருத்துவமனையில் அனுமதித்த போதும் 9 நாட்கள் கழித்து Klaus B உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நால்வரையும் கைது செய்தனர்.

குறித்த வழக்கில் நால்வரையும் குற்றவாளிகள் என முடிவு செய்துள்ள Bonn State நீதிமன்றம் விரைவில் தண்டனை வழங்கும் என தெரிகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்