Home / உலகம் / அவுஸ்ரேலியா /

உலகம் முழுவதும் 2 மணி நேரம் துண்டிக்கப்பட்ட வாட்ஸ் அப் சேவை: கொந்தளித்துப்போன பயனாளர்கள்

Posted On : May 4, 2017

சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் சேவை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பல கோடி மக்கள் பெரம் கொந்தளிப்புக்கு ஆளாகினர். செல்போனில் இணைய செய்தி சேவை அளிக்கும் வாட்ஸ் அப்பை பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ அப் சேவையை அளித்துவரும் நிலையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 2.5 மணி நேரத்திற்கு சேவை துண்டிக்கப்பட்டது. வாட்ஸ் அப் சேவை துண்டிக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

வாட்ஸ் அப் சேவை முடங்கியதால் உலகமே விழுந்துவிட்டது உலகமே முடிந்துவிட்டது என்று பேஸ்புக் மற்றும் ட்விட்டர்களில் பயனாளர்கள் தங்கள் ஆதங்கங்களை தெரிவித்துள்ளனர். பயனாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு பேஸ்புக் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. ஐ-போன் வைத்திருப்பவர்கள் தங்கள் போனில் உள்ள ஐ-மெசேஜஸ் என்ற வசதியை பயன்படுத்தி இந்த இணைய நெருக்கடியை சமாளித்ததாக கூறியுள்ளனர். இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி முதல் 3.30 மணி வரை இந்த சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. வாட்ஸ் அப் சேவை துண்டிப்பை கோபத்துடன் கேலி செய்யும் விதமாக ஏராளமான மீம்ஸ்களும் பிற சமூக வலைதளங்களில் அணிவகுத்தன.

Comments

தொடர்புடைய செய்திகள்