Home / உலகம் / ஜேர்மனி /

கிறித்துவத்திற்கு மதம் மாறிய இஸ்லாமியப் பெண் படுகொலை: அகதி கைது

Posted On : May 4, 2017

ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி வந்த பெண் ஒருவர் இஸ்லாமிய மதத்திலிருந்து கிறித்துவ மதத்திற்கு மாறிய காரணத்திற்காக கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 38 வயதான தாயார் ஒருவர் தனது பிள்ளைகளுடன் கடந்த 2011-ம் ஆண்டு ஜேர்மனியில் குடியேறினார்.

பவேரியா நகரில் தங்கியிருந்த இவருக்கு 29 வயதான ஆணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர் 2013-ம் ஆண்டு ஜேர்மனியில் குடியேறியவர் ஆவார்.

இந்நிலையில், நேற்று ஷொப்பிங் செய்வதற்காக சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு தாயார் தனது பிள்ளைகளுடன் சென்றுள்ளார்.

அப்போது, இவரை அகதியும் பின் தொடர்ந்து வந்துள்ளார்.

ஷொப்பிங் முடித்து வீடு திரும்புகையில் திடீரென பெண் மீது பாய்ந்த அந்த நபர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

இத்தாக்குதலில் படுகாயம் அடைந்த தாயார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தாக்குதல் குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் அகதியை கைது செய்தனர்.

கொலையாளியிடம் விசாரணை செய்தபோது ‘கொலை செய்யப்பட்ட பெண் இஸ்லாமிய மதத்திலிருந்து கிறித்துவ மதத்திற்கு மாறியதால் அகதி தாக்கியுள்ளதாக’ தெரியவந்துள்ளது.

எனினும், இத்தகவலை உறுதி செய்யாத பொலிசார் அகதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்