Home / உலகம் / ஐரோப்பா /

பொதுத் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்த ஐரோப்பிய அரசியல்வாதிகள் முயற்சி: மே சாடல்

Posted On : May 4, 2017

ஐரோப்பிய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பிரெக்சிற் தொடர்பில் அச்சுறுத்தல்களை வெளியிட்டு ஜூன் 8ஆம் திகதி பொதுத் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் தெரேசா மே குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் எலிசபெத் மகாராணியுடன் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து பிரதமரின் வாசஸ்தலத்தில் வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த பிரதமர், பிரஸ்சல்ஸில் உள்ள சிலர் பிரெக்சிற் பேச்சுவார்த்தை தோல்வியடைய வேண்டும் என விரும்புகின்றனர். இதேவேளை, ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன் க்ளோட் ஜங்கர் உடனான சந்திப்பின்போது, அவர் பிரெக்சிற் வெற்றிபெறாது எனத் தெரிவித்திருந்ததாக வார இறுதியில் ஜேர்மன் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

பிரித்தானியாவின் பேச்சுவார்த்தைகள் குறித்த இவ்வாறான தவறான பிரதிபலிப்புகள் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.

Comments

தொடர்புடைய செய்திகள்