Home / சினிமா / ஹாலிவுட் /

முன்னாள் காதலனுடன் கொண்ட உறவு குறித்து ‘ஸ்லம்டாக்’ நாயகி உருக்கம்!

Posted On : May 4, 2017

 

இந்தியாவில் பிறந்து தற்போது ஹாலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாகத் திகழ்பவர் ஃபரிடா பிண்டோ. இவர் நடிப்பில் 2008-இல் வெளியாகி ஆஸ்கர் விருதுகளை அள்ளிய படம் ‘ஸ்லம்டாக் மில்லினர்’. இந்தப் படத்தில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகர் தேவ் படேலுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகும் இவர்களது நட்பு தொடர்ந்து. நட்பு காதலாக மாற, இருவரும் நீண்ட நாட்களாக டேட்டிங்கில் ஈடுபட்டனர். சுமார் 6 ஆண்டு காலம் வரை நெருக்கமான உறவில் இருந்த இவர்கள் 2014-இல் பிரிந்தனர்.

இதையடுத்து தேவ் படேல் நடித்த 2016-இல் வெளிவந்த ‘லயன்’ என்ற படத்துக்காக சிறந்த துணை நடிகர் ஆஸ்கர் விருதைப் பெற்றார்.

இந்த நிலையில், தேவ் படேல் ஆஸ்கர் விருது பெற்றிருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்று நடிகையும், அவரது முன்னாள் காதலியுமான ஃபரிடா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரபல நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:

தேவ் படேல் நடிகர் என்பதைத் தாண்டி எனக்கு நல்ல நண்பர். இந்த விருதுக்காக அவர் எவ்வளவு உழைப்பை போட்டிருக்கிறார் என்பதை நன்கு அறிவேன். அதற்கு பலனாக அவருக்கு சிறப்பான விஷயம் கிடைத்துள்ளது.

இதைப் பார்த்து எப்படி பெருமைப்படாமல் இருக்க முடியும். ‘லயன்’ படத்தில் அவர் அற்புதமாக நடித்து இருந்தார்.

நமது வாழ்க்கையில் பலர் வந்து செல்வார்கள். ஒவ்வொருவரும் எதாவது ஒரு பாடத்தை கற்பிப்பார்கள். அதில் உள்ள நல்லது, கெட்டது, அழகு, அருவருப்பு போன்றவற்றை பிரித்துப்பார்த்து தழுவிக்கொள்ள வேண்டும். எப்போது வெளிப்படையான மனதுடன் உண்மையாக இருக்க வேண்டும்.

தேவுடனான பிரிவின்போது எனது வாழ்க்கை கடும் நெருக்கடிக்கு உள்ளானது. பின்னர் அதிலிருந்து மீண்டு பல விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்று கூறினார்.

Comments

தொடர்புடைய செய்திகள்