Home / உலகம் / அவுஸ்ரேலியா /

அவுஸ்ரேலியாவுடனான நல்லுறவு புதுப்பிக்கப்பட்டுள்ளது: ட்ரம்ப்

Posted On : May 5, 2017

அவுஸ்ரேலியாவுடனான நல்லுறவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய பிரதமர் மல்க்கம் டேர்ன்புல் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) நியூயோர்க்கில் இடம்பெற்றிருந்த நிலையில் சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே ட்ரம்ப் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

கோரல் கடற்பகுதியில் இடம்பெற்ற இரண்டாம் உலகப்போரின் 75 ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் இரவு விருந்திலும் இருநாட்டு தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அவுஸ்ரேலிய பிரதமர் ‘வடகொரியாவின் ஆத்திரமூட்டும் அச்சுறுத்தல்களை நாம் எதிர்க்கின்றோம். எமக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் தீவிரவாதிகளை எதிர்க்கவும் அழிக்கவும் ஈராக் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் போராடுகின்றோம். எமது சுதந்திரங்களை பாதுகாப்பதற்காக அவுஸ்ரேலியர்களும் அமெரிக்கர்களும் இன்று தோளோடு தோள் நிற்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ‘ முன்னோர்கள் காலத்தில் அமெரிக்க-அவுஸ்ரேலிய உறவுகள் ஏற்படுத்தப்பட்டது. இன்று விலைமதிப்பற்ற பாரம்பரியத்தை நாம் கொண்டாடுகின்றோம். எனவே சர்வவல்மையுள்ள கடவுள் நம்பிக்கையுடனும் வரலாற்று பெருமைகளுடனும் இருநாட்டு நட்புறவுகளை புதுப்பித்து நிரந்தர சமாதானத்திற்கான தேடலில் எமது நீடித்த பங்கை உறுதிப்படுத்துகின்றோம்’ என்று தெரிவித்துள்ளார்.

அகதிகள் விடயத்தில் கடந்த பெப்ரவரி மாதம் இவ்விருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர் இருநாட்டு தலைவர்களும் நேரில் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.

Comments

தொடர்புடைய செய்திகள்