Home / உலகம் / சுவிஸ் /

மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து தொல்லை: பெண் ஊழியரை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய அதிகாரி

Posted On : May 5, 2017

சுவிட்சர்லாந்தில் பிரபல நிறுவன அதிகாரி ஒருவர் தமது பெண் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பெர்ன் மாகாணத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு செயல்பட்டுவரும் பிரபல நிறுவனத்தில் தலைமை அதிகாரி ஒருவர் பாதிக்கப்பட்ட பெண் ஊழியரின் பிரத்யேக மின்னஞ்சலுக்கு ஆபாச கருத்துகளை தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.

தமது வேலை பறிபோகும் நிலை ஏற்படக்கூடாது என்ற காரணத்தால் குறித்த பெண் ஊழியர் தலைமை அதிகாரியின் பாலியல் தொல்லைகளை கண்டும் காணாதது போல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த அதிகாரியிடம் இருந்து வந்த மின்னஞ்சல் ஒன்று அந்த பெண் ஊழியரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அதில், குறிப்பிட்ட தினங்களில் அந்த பெண் ஊழியர் ஆபாசமான உடைகளை அணிந்து வர வேண்டும் எனவும், தலைமை அதிகாரியுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது.

மட்டுமின்றி பாலியல் உறவுக்கு மறுப்பு தெரிவித்தால் வேலைக்கு வேட்டு வைப்பது மட்டுமின்றி அவரது குடும்ப உறவையும் சிதைத்து விடுவதாகவும் அந்த மின்னஞ்சலில் மிரட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமது நிலை கருதி அந்த பெண் ஊழியர் குறித்த மேலதிகாரியை நேரில் சந்தித்து தமது நிலையை விளக்கியதுடன், மேலதிகாரியின் கட்டாயத்திற்கும் வழங்கியுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்ததை அடுத்து தண்டனை விவரங்களுக்காக பாதிக்கப்பட்ட பெண்மணியும் அந்த நிறுவன மேலதிகாரியும் காத்திருக்கின்றனர்.

விசாரணையின்போது தமது வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய இழிசெயல் இதுவென அந்த நிறுவன மேலதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் அதிகப்படியான மன உளைச்சல் காரணமாக மேலதிகாரியின் கட்டாயத்திற்கு சம்மதித்திருக்கலாம் என்ற வாதத்தை நீதிமன்றம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.

Comments

தொடர்புடைய செய்திகள்