Home / உலகம் / ஐரோப்பா /

மேயின் குற்றச்சாட்டு குறித்து எவ்வித அபிப்பிராயமும் இல்லை: ஐரோப்பிய ஆணையகம்

Posted On : May 5, 2017

பிரித்தானிய பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஐரோப்பிய ஒன்றியம் குறுக்கீடு செய்கின்றது என்ற பிரதமர் தெரேசா மேயின் குற்றச்சாட்டு குறித்து தாம் எவ்வித அபிப்பிராயமும் கொண்டிருக்கவில்லை என ஐரோப்பிய ஆணையகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐரோப்பிய ஆணையக தலைமைச் செய்தித் தொடர்பாளர் மார்கரிட்டிஸ் ஸ்கினஸ் (Margaritis Schinas ) நேற்று (வியாழக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது, ‘முக்கியமாக பிரெக்சிற்றை அடிப்படையாக கொண்டே பிரித்தானிய தேர்தல் அமைந்துள்ளது. பிரதமர் தெரேசா மேயின் கருத்துக்களும் தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாகவே இருக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் எலிசபெத் மகாராணியுடன் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் மீது பிரதமர் தெரேசா மே மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்