Home / சினிமா / ஹாலிவுட் /

ஒரு நாள் மூதாட்டியாக மாறிய பிரபல ஹாலிவுட் பாடகி

Posted On : May 6, 2017

ஹாலிவுட்டில் புகழ் பெற்ற பாடகியாகத் திகழ்பவர் அடில்லே. ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியிருக்கும் இவர், ஏராளமான இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.

இந்த நிலையில், இவர் நேற்று (வெள்ளிக்கிழமை) தனது 29-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை சற்று வித்தியாசமாகக் கொண்டாட வேண்டும் என்று நினைத்த அவர், மூதாட்டி போன்று தனது உடல் தோற்றத்தை மாற்றிக் கொண்டு அதைப் புகைப்படமாக எடுத்த சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

சாம்பல் நிறத்திலான முடியுடன், முகத்தில் வழக்கத்தை விட ஏராளமான சுருக்கங்களுடன் கண்ணாடி அணிந்துகொண்டு பிங்க் நிற ஆடை அணிந்தவாறு அந்தப் படம் அமைந்து உள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்