Home / உலகம் / பிரான்ஸ் /

ஜனாதிபதி தேர்தல்: இம்மானுவேல் மேக்ரோனை ஆதரிக்கும் ஒபாமா

Posted On : May 6, 2017

பிரான்ஸ் நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவல் மேக்ரோன் வெற்றி பெற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா காணொளி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பிரெஞ்சு மக்களின் நட்புக்காக தாம் எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன் என குறிப்பிட்டுள்ள ஒபாமா, தேர்தல்களில் ஈடுபடுவதற்கான எந்த நோக்கமும் தற்போது தமக்கு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் வெற்றி என்பது உலக அரங்கில் பல்வெறு மாறுதல்களை ஏற்படுத்தும் என குறிப்பிட்ட ஒபாமா, ஜனாதிபதி தேர்தலில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான இம்மானுவேல் மேக்ரோன் முன்னெடுத்து செல்லும் பிரசார உத்தி போற்றத்தக்கதாக அமைந்துள்ளது என்றார்.

சமீபத்தில் இம்மானுவேல் மேக்ரோனுடன் தமது உரையாடல் சிறப்பாக அமைந்தது என குறிப்பிட்டுள்ள ஒபாமா, பிரான்சின் எதிர்காலம் கருதி இந்த முறை முடிவெடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலில் தாம் இம்மானுவேல் மேக்ரோனை ஆதரிப்பதாகவும், எதிர்வரும் காலத்தில் பிரான்சை முன்னோக்கி வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்ல இம்மானுவேல் மேக்ரோன் வெற்றி பெற வேண்டும் எனவும் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்