Home / உலகம் / ஐரோப்பா /

தமக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளுக்காக கடினமாக உழைக்கவுள்ளேன்: டியோன் பேச்சு

Posted On : May 6, 2017

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான கனடாவின் சிறப்புத் தூதராகவும் ஜேர்மனிக்கான உயர்ஸ்தானிகராகவும் நியமிக்கப்பட்டுள்ள ஸ்டெபேன் டியோன், தமக்கு வழங்கப்பட்டுள்ள குறித்த கடமைகள் தொடர்பில் மிகவும் கடினமாக உழைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ஸ்டெபேன் டியோனுக்கு வழங்கப்பட்ட இரட்டை நியமனம் குறித்து எதிர்க்கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளதன் பின்னணியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றித்தில் கனடாவின் நலன்களை உறுதிப்படுத்தும் வகையில், அந்த பிராந்தியங்களுக்கு பரவலான பயணங்களை மேற்கொண்டு, அங்குள்ள மூத்த இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜஸ்டின் ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தில் முதலில் கனடாவின் வெளிவிவகார அமைச்சராக ஸ்டெபேன் டியோன் நியமிக்கப்பட்டார். பின்னர் அவரின் அமைச்சுப் பதவி கிரிஸ்டியா ஃபிரிலாட்ரிற்கு மாற்றி வழங்கப்பட்டதுடன், ஜேர்மனிக்கான உயர்ஸ்தானிகராக ஸ்டெபேன் நியமிக்கப்பட்டார். மூன்று மாதங்களின் பின்னர், வழக்கத்துக்கு மாறான இரட்டை நியமனமாக அவருக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறப்புத் தூதர் பொறுப்பினையும் பிரதமர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்