Home / உலகம் / பிரான்ஸ் /

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி யாருக்கு? தற்போதைய நிலவரம்!

Posted On : May 6, 2017

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கான தேர்தல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர் இமானுவேல் மக்ரான் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான் கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த மாதம் ஏப்ரல் 23-ஆம் திகதி நடைபெற்றது.

இத்தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலது சாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான், மற்றும் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர்.

ஆனால் இதில் யாருக்கும் பெருமதியான வாக்குகள் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கு இமானுவேல் மக்ரான் மற்றும் மரின் லீ பென் இருவரும் முன்னேறினர்.

இதைத் தொடர்ந்து தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக பிரான்சில் பிரச்சாரம் அனல்பறந்தது. இன்றுடன் பிரச்சாரம் முடிவடைந்துள்ளது.

தற்போதையை நிலவரப்படி மக்ரான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல் வாழ்க்கையில் காலடி எடுத்துவைத்த சில ஆண்டுகளில் எப்படி மக்ரான் ஜனாதிபதி அளவிற்கு வளர்ச்சி பெற்றார் என்று உலக அளவில் ஆச்சர்யம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்