Home / உலகம் / ஜேர்மனி /

ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்திய வெடிக்காத குண்டுகள் செயலிழப்பு

Posted On : May 8, 2017

இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்திய வெடிக்காத குண்டுகளை செயலிக்க செய்யும் நடவடிக்கையில் ஜேர்மனி களமிறங்கியுள்ளது.

இதன்படி, ஜேர்மனியின் 10வது பெரிய நகரமான ஹனோவரில் ஆபத்தான நிலையில் உள்ள 5 குண்டுகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) செயல் இழக்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஹனோவர் நகரில் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் பகுதியில் தீவிரபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அங்கு தங்கியிருக்கும் ஐம்பதாயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவற்றில் 7 பாதுகாப்பு இல்லங்கள், மருத்துவமனைகள் போன்றவையும் அடங்கும். அத்தோடு, குண்டுகளை செயல் இழக்க செய்யும் முன்பு அப்பகுதியில் புகையிரத போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது.

வீடுகளில் இருந்து, வெளியேறும் மக்கள் மருந்து உள்ளிட்ட தேவையான பொருட்களை எடுத்துச் செல்லுமாறும் கேஸ் மற்றும் இலத்திரனியல் பொருட்களை அணைத்துவிட்டு செல்லும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்