Home / உலகம் / பிரான்ஸ் /

இமானுவேல் மக்ரோனுக்கு டொனால்ட் டஸ்க் வாழ்த்து தெரிவித்து கடிதம்

Posted On : May 9, 2017

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோனுக்கு  ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk), வாழ்த்து தெரிவித்து இன்று (திங்கட்கிழமை) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அத்துடன், அடுத்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் உச்சிமாநாட்டின் போது மக்ரோங்கை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கவுன்சிலுடன் ஐரோப்பிய ஆணைக்குழுவும் இணைந்து மக்ரோங்குக்கான வாழ்த்துச் செய்தியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் டுவிட்டர் பக்கத்தில், “உங்கள் அபார வெற்றிக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நீங்கள் இதுவரை காலமும் தெரிவித்து வந்த ஆதரவு ஐரோப்பிய மக்களை பாதுகாக்கும் வகையில் அமைந்தது. இனிவருங்காலங்களிலும் உங்கள் ஒத்துழைப்பு பேருதவியாக இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்