Home / உலகம் / பிரான்ஸ் /

பிரான்சில், சர்க்கஸ் ஒன்றில், பார்வையாளர்கள் முன் தன் பயிற்சியாளரை சிங்கம் கடித்து குதறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Posted On : May 9, 2017

பிரான்சில், சர்க்கஸ் ஒன்றில், பார்வையாளர்கள் முன் தன் பயிற்சியாளரை சிங்கம் கடித்து குதறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பிரான்ஸ் நாட்டில், டவ்லென்ஸ் என்ற இடத்தில், ‘பப்பலோ சர்க்கஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில் சர்க்கஸ் காட்சி நடந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்வையாளர்கள் பார்த்து கொண்டு இருக்கும் போதே, கூண்டுக்குள் பயிற்சியாளர் சொல்படி நடந்து கொண்டிருந்த சிங்கம் திடீரென சீற்றம் அடைந்து பயிற்சியாளர் கழுத்தை வாயால் கவ்வியது.

அவரை கொடூரமான முறையில் இழுத்து சென்று குதற தொடங்கியது. இதை பார்த்து பார்வைாளர்கள் அலறினர். சர்க்கஸ் ஊழியர்கள் ஓடி வந்து சிங்கத்தை விரட்டி, பயிற்சியாளரை மீட்டனர். படுகாயம் அடைந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவத்தை பார்வையாளர் ஒருவர் மொபைல் போன் மூலம், வீடியோ காட்சியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்