Home / உலகம் / ஐரோப்பா /

பிரித்தானிய தோ்தல் களத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை!

Posted On : May 9, 2017

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மையமாக வைத்து பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் மேயின் கன்சர்வேட்டிவ் கட்சியே தற்போது முன்னிலையில் திகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) 2005 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 46 சதவீதமானோர் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாகவே தெரிவித்துள்ளனர்.

30 சதவீதத்தினரே தொழிற்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  பொதுத் தேர்தலை முன்னிட்டு பிரசார நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வரும் பிரதமர் தெரேசா மே, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவளிக்குமாறும் பிரெக்சிற் பேச்சுவார்த்தைக்கு அது பெரும் உதவியாக இருக்கும் எனவும் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார்.

இருப்பினும், பிரெக்சிற் விடயத்திற்கு பொதுத் தேர்தலால் எதுவித பயனும் கிடைக்காது என ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், குறித்த விலகல் நடவடிக்கை கடினமானதாக அமையும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுதல் குறித்த தீர்மானத்திற்கு பிரித்தானியா பணம் செலுத்த நேரிடும் எனவும் ஒன்றியம் அறிவித்திருந்தது.

Comments

தொடர்புடைய செய்திகள்