Home / உலகம் / பிரான்ஸ் /

அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய கட்சி தலைமையகத்திற்கு விரைந்தார் மக்ரோங்

Posted On : May 10, 2017

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள இளம் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங், தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த பணிகளை முன்னெடுப்பதற்காக கட்சி தலைமையகத்திற்குச் சென்றுள்ளார்.

மக்ரோங் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

நாட்டின் பிரதமர் மற்றும் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள 577 வேட்பாளர்கள் குறித்த பட்டியல் எதிர்வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பான பணிகளை முன்னெடுக்கும் பொருட்டே தலைமையத்திற்கு சென்றுள்ளார்.

மக்ரோங்கின் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் தற்போது ஆசனம் இல்லாத போதிலும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய கட்சியாக அது தோற்றமளிக்கும் என கடந்த வாரம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சோசலிச கட்சியைச் சேர்ந்த பிரான்சின் முன்னாள் பிரதமர் மனுவெல் வோல்ஸும் அக்கட்சியிலிருந்து விலகி மக்ரோங்கின் கட்சியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்