Home / உலகம் / பிரான்ஸ் /

பாதுகாப்பு காரணமாக மூடப்பட்ட பரிஸ் ரயில் நிலையம் மீண்டும் திறப்பு

Posted On : May 10, 2017

பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக மூடப்பட்ட பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள Gare du Nord ரயில் நிலையம், மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ரயில் நிலைய வளாகத்திலிருந்து நேற்று (திங்கட்கிழமை) மாலை திடீரென மக்கள் வெளியேற்றப்பட்டதுடன், ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஐரோப்பாவின் பரபரப்பு மிகுந்த போக்குவரத்து மையங்களில் ஒன்றான குறித்த ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு செயற்பாடு குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகாத போதிலும், மூன்று சந்தேகநபர்களை தேடியே ரயில் நிலையம் மூடப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு பரிஸ் தாக்குதல்களுக்கு பின்னர் பிரான்ஸில் அவசரகாலநிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்