Home / உலகம் / ஐரோப்பா /

பொதுத் தேர்தலில் பிரெக்சிற் ஆதிக்கம் செலுத்தாது: ஜெரமி கோர்பின்

Posted On : May 10, 2017

பிரெக்சிற் சர்ச்சை தீர்க்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது பொதுத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தாது என்றும் பிரித்தானியாவின் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

தனது கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மன்செஸ்டரில் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறியதன் பின்னர் பிரித்தானிய தொழிற்துறையை பாதுகாக்கும் வகையில் ஒரு ஒப்பந்தத்தை தொடரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் சர்ச்சை தற்போது தீர்க்கப்பட்டுள்ளது. எனவே பிரெக்சிற்-இற்கு பின்னர் எவ்வாறான நாட்டை விரும்புகின்றோம் என்பதனையே தற்போது தீர்மானிக்க வேண்டும்.

பிரித்தானிய தொழிற்துறையின் எதிர்காலத்தை பாதுகாக்கும், சிறந்த சமூக மற்றும் பொருளாதார மேம்பாடுடைய பிரெக்சிற்றையே தொழிற்கட்சி விரும்புகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Comments

தொடர்புடைய செய்திகள்