Home / உலகம் / பிரான்ஸ் /

இந்தியா- பிரான்சு இடையேயான உறவு தொடர்ந்து வலுப்பெறும்: பிரான்சின் புதிய அதிபருக்கு பிரணாப் முகர்ஜி வாழ்த்துக்கடிதம்

Posted On : May 11, 2017
புதுடெல்லி,
பிரன்சுடனான முக்கியத்துவம் வாய்ந்த  உறவுக்கு இந்தியா மதிப்பளிப்பதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரான்சு அதிபராக அண்மையில் தேர்வான  இம்மானுவேல் மாக்ரானுக்கு எழுதிய வாழ்த்துக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில், இந்தியா -பிரான்சு இடையே நீண்டகாலமாக உள்ள நட்புறவு, பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு உள்ளிட்டவை மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரான்சின் புதிய அரசாங்கத்துடன் பலதரப்பட்ட கூட்டுறவை பலப்படுத்தி முன்னெடுத்துச்செல்ல இந்தியா ஆர்வமாக உள்ளது. உங்களுக்கு பிரான்சு மக்கள் வழங்கியிருக்கும் ஸ்திரான வெற்றி, மக்கள் உங்கள் தலைமையின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையையும் தொலைநோக்கு பார்வையும் நிருபித்துள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹோலந்த் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ல் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவில் என் மார்சே என்ற அணியின் சார்பில் போட்டியிட்ட மக்ரோனுக்கு 65.5% சதவித ஓட்டுகள் இவருக்கு அடுத்தபடியாக மெரைன் லி பென்னுக்கு 34.5% வாக்குகள் கிடைத்தன. மாக்ரோன் வெற்றி பெற்றதயைடுத்து வரும் 14 ஆம் தேதி புதிய அதிபராக முறைப்படி பதவியேற்றுக்கொள்கிறார்

Comments

தொடர்புடைய செய்திகள்