Home / சினிமா / ஹாலிவுட் /

ஒரே நாளில் ஆயிரம் புஷ்-அப் செய்த ஹாலிவுட் நடிகர் – ஏன் தெரியுமா?

Posted On : May 11, 2017

பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் தனது கேரக்டருக்காக ஒரே நாளில் ஆயிரம் புஷ்-அப் செய்து மெனகெட்டு இருக்கிறார்.

ஹாலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகராகத் திகழ்பவர் சார்லி ஹன்னம். இவர் தற்போது ‘கிங் ஆர்தர்: லெஜெண்ட் ஆஃப் தி ஸ்வார்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பேண்டஸி திரைப்படமாக உருவாகி வரும் இதில் புகழ் பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர் டேவிட் பெக்கம்மும் நடிக்கிறார்.
இந்தப் படத்தை ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய ஹய் ரிட்சி இயக்குகிறார்.

இந்த நிலையில், படத்தில் கிங் ஆர்தராக நடித்து வரும் சார்லி ஹன்னம் அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ப உடல்அமைப்பைப் பெறுவதற்காக மிகவும் கடினமாக மெனக்கெட்டு வருகிறாராம். இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘கிங் ஆர்தர்’ படத்தில் என கேரக்டருக்காக தினமும் 1000 புஷ்-அப்புகள் வரை எடுக்கிறேன். சில சமயங்களில் என்னால் 1000 முறை செய்ய முடியாமல் போகும். மறுநாளில் அவற்றை சேலஞ்சாக எடுத்துக் கொண்டு முன்னாளிள் செய்யாமல் விட்டதையும் சேர்த்து செய்வேன்.

படப்பிடிப்பின்போது போது 14 மணி நேரம் வரை சண்டை போட்டு இருக்கிறேன். அந்த நேரங்களில் வீட்டுக்கு மிகவும் சோர்வாக வந்து, 100 புஷ்-அப்புகள் வரை மட்டுமே செய்வேன் என்று கூறினார்.

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் வெளியாகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்