Home / உலகம் / சுவிஸ் /

சுவிஸில் வேலையில்லா திண்டாட்ட பிரச்சனை குறைவு

Posted On : May 11, 2017

சுவிற்சர்லாந்தில் வேலையில்லா திண்டாட்ட பிரச்சனை கணிசமாக குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொருளாதார அரசு செயலகமான SECO வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் முடிவில் 146,330 பேர் வேலையில்லை என கூறி வேலைவாய்ப்பு முகாமில் பதிவு செய்துள்ளனர்.

இது மார்ச் மாதத்தில் 152,280 ஆக இருந்தது. இதன் மூலம் வேலையின்மை சதவீதம் 3.4 சதவீதத்திலிருந்து 3.3 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸில் பிரஞ்ச் மற்றும் இத்தாலி மொழி பேசும் பகுதிகளில் 4.3 சதவீதமாகவும், ஜேர்மன் மொழி பேசும் பகுதிகளில் 2.9 சதவீதமாகவும் வேலையின்மை பிரச்சனை உள்ளது.

வேலையின்மை பிரச்சனையில் அதிகம் திண்டாடும் நகரமாக 5.9 சதவிதத்துடன் Neuchatel உள்ளது.

ஜெனிவாவில் 5.3 சதவீதமும், ஜூராவில் 4.7 சதவீதமும் வேலையின்மை பிரச்சனை உள்ளது.

Obwalden மற்றும் Appenzell-Innerrhoden பகுதியில் 1 சதவீதம் என்ற குறைந்த அளவே உள்ளது.

மொத்தத்தில் சுவிஸ் மக்கள் 2.3 சதவீதம் மற்றும் வெளிநாட்டு மக்கள் 5.9 சதவீதம் என்ற அளவில் வேலையில்லாமல் உள்ளனர்.

இது அதிகாரபூர்வமாக வேலையற்றோர் என பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையை வைத்து எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவுகள் என SECO தெரிவித்துள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்