Home / சினிமா / ஹாலிவுட் /

‘டெக்கிலா பார்’ வடிவில் கேக் – ‘பேட் மேன்’ பிறந்தநாளில் சர்ப்ரைஸ்

Posted On : May 11, 2017

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியின் பிறந்தநாளுக்கு டெக்கிலா பார் வடிவிலான கேக்கை பரிசாக அளித்து அவரது மனைவுயம், புகழ் பெற்ற வழக்கறிஞருமான அமல் க்ளூனி சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.

கிராவிட்டி, மணி மாண்ஸ்டர், பேட் மேன் உள்ளிட்ட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஜார்ஜ் க்ளூனி. இவர் கடந்த 6-ஆம் தேதி தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்தப் பிறந்தநாளில் அவருக்கு பல்வேறு இன்ப அதிர்ச்சிகள் நிகழ்ந்துள்ளது.

க்ளூனியின் நெருங்கிய தோழியான முன்னாள் சூப்பர்மாடல் கின்டி கிராஃபோர்டு மற்றும் அவரது கணவர் ராண்டி கெர்பேர் லண்டனிலுள்ள அவரது வீட்டுக்கு நேரில் வருகை தந்தனர். இதை சற்றும் எதிர்பாராத க்ளூனி மகிழ்ச்சி வெள்ளத்தில் உறைந்துபோனாராம்.

கிரோஃபோர்டின் கணவர் கெர்பேர், க்ளூனியின் பிஸினஸ் அசோசியேட்டாகவும் திகழ்கிறார்.

இதைத் தொடர்ந்து க்ளூனியின் மனைவி அமல் க்ளூனி, பிறந்தநாள் பரிசாக டெக்கிலா வடிவிலான கேக் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இதையடுத்து க்ளூனி, கெர்பர் ஆகிய இருவரும் பிறந்தநாள் கேக் முன்னிலையில் புகைகப்படம் எடுத்துக்கொண்டனர். அந்தப் புகைப்படத்தை கெர்பர் தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில், காஸமிக்கோஸ் (டெக்கிலாவில் ஒரு வகை) ஸ்டைலில் க்ளூனி பிறந்தநாளை கொண்டாடுகிறோம். இந்த கேக்கை உருவாக்கிய சமையல் நிபுணர் அமல் மற்றும் நண்பர்களுக்கு நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 2013-இல் கெட்பரும், க்ளூனியும் சேர்ந்து காஸமிக்கோஸ் பிராண்ட் டெக்கிலா பார் ஒன்றை உருவாக்கி தொழில் நடத்தி வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்