Home / உலகம் / ஐரோப்பா /

ஒரே பிராந்தியம் ஒரே பாதை’ மாநாட்டில் பங்கேற்பதற்காக கிரேக்க பிரதமர் பீஜிங் விஜயம்

Posted On : May 12, 2017

சர்வதேச ஒத்துழைப்புகளுக்கான ‘ஒரே பிராந்தியம் ஒரே பாதை’ மாநாட்டில் பங்கேற்பதற்காக கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் இன்று (வெள்ளிக்கிழமை) பீஜிங் சென்றுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி கிரேக்க தலைநகர் எதென்ஸில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜியை சந்தித்த போது குறித்த மாநாட்டில் பங்கேற்றுமாறு வாங் ஜி அழைப்பு விடுத்ததாக அலெக்சிஸ் சிப்ராஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச போக்குவரத்து மையமாக தன்னை கட்டமைப்பதற்கு முயற்சிக்கும் கிரேக்கத்திற்கு இது முன்னேற்றகரமான ஒன்றாக அமையும் என்று கூறப்படுகின்றது.

மேற்படி ‘ஒரே பிராந்தியம் ஒரே பாதை’ மாநாடு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ஒட்டுமொத்த அரச தலைவர்களும் அரசாங்க தலைவர்களும் பங்கேற்றவுள்ளனர்.

சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு மாநாட்டை ஆரம்பித்து வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்