Home / உலகம் / பிரான்ஸ் /

பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி கர்ப்பமாக இருக்கிறாரா? சர்ச்சையை கிளப்பிய பத்திரிகை

Posted On : May 12, 2017

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரானின் மனைவி கர்ப்பமாக இருப்பது போல் சார்லி ஹெப்டோ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ள விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக 39 வயதான இம்மானுவேல் மேக்ரான் சில தினங்களுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டார்.

மேக்ரான் பள்ளியில் பயின்றபோது இவருடைய ஆசிரியையான பிரிஜ்ஜிட்(64) என்பவர் மீது காதல் கொண்டார். இவர்களின் காதல் நிறைவேறியதை தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

மேக்ரானை விட அவரது மனைவி 24 வயது மூத்தரவாக இருந்ததால் இவ்விவகாரம் தொடர்ச்சியாக பத்திரிகைகளில் விவாதிக்கப்பட்டு வந்துள்ளது.

இது குறித்து மேக்ரான் பதிலளித்தபோது, ‘என் மனைவியை விட நான் 24 வயது மூத்தவராக இருந்தால் இந்த உலகம் கேள்வி எழுப்பாது. ஆனால், என் மனைவி என்னை விட 24 வயது மூத்தரவாக இருப்பதால் பத்திரிகைகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இவற்றை பெண்களுக்கு எதிரான வன்கொடுமையாகவே நான் பார்க்கிறேன்’ என பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் மிகவும் பிரபலமான சார்லி ஹெப்டோ பத்திரிகை சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மேக்ரோனின் மனைவி கர்ப்பமாக இருப்பது போலவும், அவரது வயிற்றை மேக்ரான் தொட்டுக்கொண்டு இருப்பது போலவும் புகைப்படம் வெளியிட்டுள்ளது.

மேலும், ‘21-ம் நூற்றாண்டில் பல அற்புதமான சாதனைகளை செய்ய உள்ளதாக மேக்ரான் சபதம் எடுத்துள்ளார். ஒருவேளை, வயதான அவருடைய மனைவி கர்ப்பம் அடைந்தால் அதுவும் ஒரு அற்புதமான சாதனையாக இருக்கும்’ என கிண்டலாக செய்தி வெளியிட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்