Home / உலகம் / பிரான்ஸ் /

பிரான்ஸ் தலைமையிலான கடற்கரை தாக்குதல் பயிற்சிகள் ஒத்திவைப்பு

Posted On : May 12, 2017

மேற்கு பசுபிக் கடற்பிராந்தியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த பிரான்ஸ் தலைமையிலான கூட்டு கடற்கரை தாக்குதல் பயிற்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பயிற்சி நடவடிக்கைகளுக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பயிற்சிக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட  கோளாறு காரணமாக  இந்த பயிற்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்க தரை மற்றும் கடற்படையினர் உள்ளடங்கலாக பிரான்ஸ் தலைமையில் நடைபெறவிருந்த முதலாவது கூட்டு கடற்கரை தாக்குதல் பயிற்சியே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சீனா அதன் கடலோர மற்றும் தென் சீன கடலுக்கு அப்பால்  செல்வாக்கை விரிவாக்குதற்காக விமானந்தாங்கி கப்பல்களை பெறுகின்ற நிலையில், வளர்ந்துவரும் இராணுவ சக்தியை எதிர்த்து போராடும் வகையில் இந்த பயிற்சி குவாமில் திட்டமிடப்பட்டிருந்தது.

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து பீஜிங்குடன் வலுவான பொருளாதார உறவுகளை நாடுகின்ற அதேவேளை ஜப்பானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை ஆழமாக்குவதன் மூலம் சீனாவின் விரிவடைந்துவரும் பலத்தினை சமநிலைப்படுத்தவும் முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்