Home / சினிமா / ஹாலிவுட் /

மீண்டும் டேட்டிங்கில் ஜோலி – பிராட் பிட் ஜோடி

Posted On : May 12, 2017
ஹாலிவுட் சினிமாவின் ஹாட் நட்சத்திர தம்பதிகளாக ஏஞ்சலினா ஜோலி – பிராட் பிட் திகழ்ந்தனர். இதையடுத்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

 இதைத் தொடர்ந்து தற்போது இருவரும் 7 மாதங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் இருவரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில், ஜோலி – பிட் ஆகியோர் மீண்டும் டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தங்களுக்குள் இருக்கும் மனக்கசப்புகளை மறந்து, பழைய மனநிலைக்கு திரும்பியதுடன் ஒருவருக்கொருவர் அவ்வப்போது சந்தித்தும் வருகின்றனராம்.

விவாகரத்து கோருவதற்கு முன்னர் இருந்தவாறு, பரஸ்பரம் வெளிப்படையான மனதுடன் இருப்பதாகவும் அவர்களின் நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தொலைப்பேசி மூலம் அடிக்கடி பேசிக் கொண்டும் வருகிறார்களாம்.

எனவே ஜோலி – பிட் விவாகரத்து குறித்து விரைவில் ஒரு முடிவு தெரியவரும் என ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்