Home / உலகம் / சுவிஸ் /

முதியவரை கொலை செய்த பெண்ணிற்கு 13 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted On : May 12, 2017

சுவிட்சர்லாந்து நாட்டில் முதியவரை கொலை செய்த பெண்ணிற்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சுவிஸில் உள்ள சூரிச் நகரில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 57 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டில் 77 வயதான இவருடைய தாத்தாவும் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பெண்ணிற்கும் அவரது தந்தைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பல சமயங்களில் தந்தையை மகள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

பேத்தியிடம் இருந்து தனது மகனை பாதுகாக்க வேண்டும் என திட்டமிட்ட தாத்தா, மகளை விட்டு பிரிந்துவிடுமாறு தனது மகனுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார்.

மேலும், இருவரையும் இறுதியில் அவர் பிரித்து வைத்ததாக கூறப்படுகிறது.

தன்னிடம் இருந்து தனது தந்தையை பிரித்த தாத்தாவை பழிவாங்க பெண் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் இரும்பு கம்பியால் தாத்தாவை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.

பொலிசாரிடம் சிக்க கூடாது என ஆதாரங்களையும் அவர் அழித்துள்ளார். ஆனால், துரதிஷ்டவசமாக இரும்புக்கம்பியில் இருந்த டி.என்.ஏ மூலம் அவர் கொலையாளி என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் சூரிச் உயர் நீதிமன்றம் பெண்ணிற்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

ஆனால், இத்தீர்ப்பினை எதிர்த்து பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

இந்த மேல் முறையீடு வழக்கு தொடர்பான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சரியானது எனக் கூறி 13 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிபதி உறுதி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்