Home / உலகம் / ஐரோப்பா /

ரோம் மத்திய நகரில் இருவேறு வெடிப்பு சம்பவங்கள்

Posted On : May 12, 2017

மத்திய ரோம் நகரில் அமைந்துள்ள தபால் நிலையத்திற்கு அருகாமையில் இன்று (வெள்ளிக்கிழமை) இருவேறு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவங்களில் கார் ஒன்று சேதமாகியுள்ள போதிலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அவசர சேவைகள் அதிகாரிகளை மேற்கோள்காட்டி இத்தாலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சம்பவம் குறித்து விபரித்த உணவக ஊழியர் ஒருவர் ‘இரண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றது. இதன்போது உணவகத்திலிருந்து நாம் வெளியேறினோம். கடுமையான புகை மூட்டமாக இருந்தது. அருகில் சென்று பார்த்தோம். சிறியளவிலான சேதமே இருந்தது’ என்று தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் பொலிஸ் அதிகாரிகளும் தீயணைப்பு வீரர்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.

Comments

தொடர்புடைய செய்திகள்