Home / ஜோதிடம் /

ஏழரை சனியில் இதை மட்டும் செய்துவிடாதீர்கள்

Posted On : May 13, 2017

ஜோதிடத்தில் ஒருவரின் சந்திர ராசிக்கு, முன் ராசியிலும், சந்திர ராசியிலும், அதற்கு அடுத்த ராசியிலும் சனீஸ்வரன் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரைச் சனியாகும்.

ஏழரைச் சனியில் செய்யக் கூடாதவை என்ன?
  • தொழில் தொடங்குதல், தொழிலில் கூட்டு சேர்த்த, புதிய முதலீடுகள், புதிய நட்பின் உறவுகள் கொள்வது மற்றும் புதிய மனைபுகுதல் போன்றவை செய்யக் கூடாது.
  • திருமணங்கள், அஸ்திவாரங்கள் போடுவது, பெயர், உடை, தினசரி வேலை மற்றும் கல்வி ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது.
  • பத்திரங்கள் பதிவு செய்வது, கையெழுத்து போடுவது, புதிய நவீன மருந்துகள் சாப்பிடுவது, புதிய சம்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களை செய்யக் கூடாது.
  • கடன்கள் கொடுப்பது, வாங்குவது, மது குடிப்பது, இரவில் அதிகமாய் விழித்திருப்பது மனதை திட்டங்களுக்காக அலைக்கழிப்பது போன்றவை கூடாது.
  • புதியதாக அரசியலில் ஈடுபடுதல், வாகனங்களை வேகமாக ஓட்டுவது, எந்த ஒரு செயலிலும் அவசரம் அல்லது பதட்டமாக செய்வது இது போன்ற செயலில் ஈடுபடவேக் கூடாது.
ஏழரைச் சனியில் செய்ய வேண்டியவை என்ன?
  • வாடகை வீட்டுக்கு குடியேறலாம். வெளியூர் வேலைகளுக்கு செல்லலாம்.
  • பழைய கடன்களை அடைக்கலாம். மகப்பேறு செய்து கொள்ளலாம்.
  • உயில்கள் எழுதி வைக்கலாம். தான தர்மம் செய்யலாம்.
  • பழைய கோவில்களை திருத்திக் கட்டலாம். குலதெய்வ வழிபாடுகள் செய்யலாம்.
  • சீமந்தம் வளைகாப்பு செய்யலாம். சுபவிஷேசங்களுக்கு செலவிடலாம்.
  • பழைய கட்டிடங்கள் வேலை செய்யலாம். பழைய பொருட்களை விற்கலாம்.
  • புனித யாத்திரைகள் ஏதேனும் உதவி செய்யலாம். நல்ல விரதங்களை கடைப்பிடிக்கலாம்.
  • தினமும் அதிகாலையில் எழுந்து தியானம் யோகா போன்ற பயிற்சிகளைசெய்யலாம்.

Comments

தொடர்புடைய செய்திகள்