Home / ஜோதிடம் /

திருமண நாள்: இந்த 11 விதிகளை பின்பற்றினால் அதிர்ஷ்டம் தான்

Posted On : May 13, 2017

எந்தவொரு சுபகாரியங்களாக இருந்தாலும், அதற்கு ஏற்ற சிறந்த நாளாக பார்ப்பது மிகவும் முக்கியம். அதேபோல் திருமண நாள் பார்க்கும் போது, அந்த நாட்களுக்கான ஒன்பது விதிகள் இதோ!

முதல் விதி

திருமணம் மல மாதத்தில் இடம்பெறக் கூடாது. மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வரும் நாளாகும்.

இரண்டாம் விதி

சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி இந்த மாதங்களை தவிர, இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

மூன்றாம் விதி

திருமணம் செய்யும் போது, முயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வதுக் கொள்வது மிகவும் சிறப்பானது.

நான்காம் விதி

திருமணம் செய்துக் கொள்ள புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகளே மிகவும் ஏற்ற கிழமைகள். எனவே இதர கிழமைகளில் திருமணம் செய்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.

ஐந்தாம் விதி

துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகளை தவிர, இதர திதிகளில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஆறாம் விதி

முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

ஏழாம் விதி

அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக் கூடாது.

எட்டாம் விதி

திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக் கூடாது.

ஒன்பதாம் விதி

திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிக மிக முக்கியமான விதியாகும்.

பத்தாம் விதி

மணமக்களின் பிறந்த நட்சத்திர நாளிலும், 3, 5, 7, 12, 14, 16, 21, 23, வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக் கூடாது.

பதினொன்றாம் விதி

மணமகள் அல்லது மணமகனின் பிறந்த தேதி அல்லது கிழமைகளில் கட்டாயமாக திருமணம் செய்யவேக் கூடாது.

குறிப்பு

ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும்.

Comments

தொடர்புடைய செய்திகள்