Home / உலகம் / ஜேர்மனி /

விமானத்திலிருந்து வெளியேறிய பயணிகள்: என்ன காரணம்?

Posted On : May 13, 2017

ஜேர்மனியிலிருந்து ஸ்பெயினுக்கு கிளம்பவிருந்த விமானத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் விடயங்கள் அரங்கேறியதால் பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்தார்கள்.

ஜேர்மனியின் Cologne நகரிலிருந்து ஸ்பெயினில் உள்ள Palma நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று கிளம்ப தயாராக இருந்தது.

அப்போது, விமானத்தில் இருந்த பயணிகள், சந்தேகத்துக்கு இடமான உரையாடல்களில் சிலர் விமானத்தின் உள்ளே ஈடுப்பட்டதாக விமான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள்.

பின்னர், விமானத்தில் எதாவது சந்தேகத்துக்குரிய பொருட்கள் இருக்கிறதா என அதிகாரிகள் சோதனை செய்தார்கள். ஆனால் அப்படி ஏதும் அங்கு கிடைக்கவில்லை.

விமானத்தை இயக்கலாமா என அதிகாரிகள் பயணிகளிடம் கேட்டதற்கு, விமானத்தில் இரண்டு மர்ம நபர்கள் இருந்ததாகவும் விமானம் கிளம்ப தயாரான போது அவர்கள் கீழே இறங்கி சென்று விட்டதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

அதனால் தங்களுக்கு இந்த விமானத்தில் செல்ல பயமாக இருக்கிறது என கூறிய பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டார்கள். இதையடுத்து பயணிகள் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்