Home / உலகம் / ஐரோப்பா /

ஒரே நேரத்தில் 99 நாடுகள் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன: யூரோபோல்

Posted On : May 15, 2017

ஒரே நேரத்தில் சுமார் 99 நாடுகள் இணையத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை முன்னெப்போதும் இல்லாததொன்று என ஐரோப்பிய பொலிஸ் அமைப்பான யூரோபோல் தெரிவித்துள்ளது.

இந்த இணையத் தாக்குதலால் சுமார் 75,000 கணிணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யூரோபோல் அமைப்பு தெரிவித்துள்ளது.

ரான்சம்வெயார் (Ransomware) என அழைக்கப்படும் குறித்த இணையத் தாக்குதல் முறைமை கணிணியில் உள்ள மென்பொருட்களை ஊடுருவுவதோடு குறித்த இணையத்தளத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர பணம் கேட்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத் தாக்குதலுக்கு பிரித்தானியா, ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் உள்ளாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க சர்வதேச ரீதியிலான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என யூரோபோல் அமைப்பு தெரிவித்துள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்