Home / உலகம் / ஐரோப்பா /

கணிணிகள் மற்றும் மடிக்கணிணிகளை பைகளில் கொண்டு செல்லத் தடை

Posted On : May 15, 2017

விமானத்தில் செல்லும் போது கணிணிகள் மற்றும் மடிக்கணிணிகளை பைகளில் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீடிப்பது தொடர்பில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கலந்துரையாடவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரம் பிரஸ்சல்ஸில் நோட்டோ உச்சிமாநாடு நடைபெறவுள்ள நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பில் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம், பாதுகாப்பு நோக்கம் கருதி எட்டு முஸ்லிம் நாடுகளுக்கு குறித்த தடை விதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

கணிணிகள் மற்றும் மடிக்கணிணிகள் ஆகியவற்றினுள் குண்டுகளை பதுக்கி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

எனினும், இந்த விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை எதுவித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்