Home / உலகம் / பிரான்ஸ் /

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் இம்மானுவேல் மேக்ரான்

Posted On : May 15, 2017

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக இம்மானுவேல் மேக்ரான் அரசு சார்பாக நடைபெற்ற விழாவில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக்கொண்டார்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸில் உள்ள Elysee மாளிகையில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

நிகழ்ச்சிக்கு வந்த இம்மானுவேல் மேக்ரானை முன்னாள் ஜனாதிபதியான பிராங்கோயிஸ் ஹாலிண்டே வரவேற்றார். இருவரும் சிவப்பு கம்பளி மீது நடந்து சென்றனர்.

பின்னர், அரசு மரியாதையுடன் நடைபெற்ற நிகழ்வில் பிரான்ஸ் நாட்டின் இளம் ஜனாதிபதியாக இம்மானுவேல் மேக்ரான் பதவியேற்றுக்கொண்டார்.

பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் ஜனாதிபதி அலுவலகத்தில் பிராங்கோயிஸ் ஹாலண்டே மற்றும் இம்மானுவேல் மேக்ரான் சுமார் 30 நிமிடங்கள் வரை பேசியுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள், அணு ஆயுதங்கள் தொடர்பான ரகசிய குறியீடுகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை பிராங்கோயிஸ் ஹாலண்டே மேக்ரானுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 7-ம் திகதி நடைபெற்ற தேர்தலில் மேக்ரான் 66.1 சதவிகிதம் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்