Home / உலகம் / ஐரோப்பா /

பிரித்தானியாவில் உள்ள ஒன்றிய பிரஜைகளின் உரிமைகளை ஐரோப்பிய நீதிமன்றம் மேற்பார்வை செய்யும்?

Posted On : May 15, 2017

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகியதன் பின்னர், பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய நீதிமன்றம் மேற்பார்வை செய்யும் தீர்மானம் வரவேற்கப்பட மாட்டாதென பிரெக்சிற் விடயங்களை கையாளும் அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில், “நாம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியதன் பின்னர் அதனுடன் தொடர்புபட்ட நீதிமன்றம், ஒன்றிய பிரஜைகள் தொடர்பில் மேற்பார்வை செய்யும் என்பதை பிரித்தானியா வரவேற்காது. இது தொடர்பில் இறுதிக்கட்ட தீர்மானம் மேற்கொள்ளும் நடவடிக்கையின் போது கலந்தாலோசிக்கப்படும்” என தெரிவித்தார்.

இதேவேளை, டேவிட் டேவிஸூடன் ஐரோப்பிய பொலிஸ் அமைப்பான யூரோபோலின் இயக்குநர் ரொப் வெயின்ரைட்டும் குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அண்மையில் நடத்தப்பட்ட இணைய தாக்குதல் குறித்து தமது உரையில் சுட்டிக்காட்டிய ரொப் வெயின்ரைட்,  குறித்த செயற்பாடு மேலும் தொடரலாம் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்