Home / உலகம் / ஐரோப்பா /

பெல்ஜியத்திற்கு விஜயம் மேற்கொண்டார் பொரிஸ் ஜோன்சன்

Posted On : May 15, 2017

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் (Boris Johnson) இன்று (திங்கட்கிழமை) பெல்ஜியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் பிரெக்சிற் தொடர்பான விடயங்களும் கலந்தாலோசிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராணுவ பயிற்சிகளுக்கு உதவி புரியும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவாக்கப்படவுள்ள கட்டளை மையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில், குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தும் பொருட்டு சிறந்த தலைமைத்துவம் வேண்டும் என்பதனால் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே பொரிஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்கும் பொருட்டு பெல்ஜியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்