Home / உலகம் / பிரான்ஸ் /

ஆன் இதால்கோவை சந்தித்த இம்மானுவல் மக்ரோன்!!

Posted On : May 16, 2017
நேற்றையதினம் புதிய ஜனாதிபதியாக இம்மானுவல் மக்ரோன் பதவியேற்றன் பின்னர், பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோவை சந்தித்தார்.
மாலை 5 மணி அளவில் நகர மண்டபத்துக்கு வந்திருந்த இம்மானுவல் மக்ரோனை ஆன் இதால்கோ வரவேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற அன்றே தம் கடமைகளை ஆரம்பிப்பதாக தெரிவித்த மக்ரோன், நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிஸ் நகர மண்டபத்து சென்றிருந்தார். வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் நகர மண்டபம், நேற்று புதிய ஜனாதிபதிக்காக திறக்கப்பட்டது. 800 பார்வையாளர்கள்  வெளியில் காத்திருக்க, முதல் 15 நிமிடங்கள் ஆன் இதால்கோவுக்கும், மக்ரோனுக்கும் இடையே சந்திப்பு நிகழ்ந்தது. அதன் போது பரிஸ் நகரத்தின் முன்னேற்றம் குறித்தும், ஒலிம்பிக் போட்டிகள் குறித்தும் உரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், புதிய ஜனாதிபதி வருகை பதிவேட்டு புத்தகத்தில் கையெழுத்திட்டார். அதன் பின்னர் பல ஊடகங்கள், நகர மண்டப ஊழியர்கள் என 800க்கும் மேற்பட்டவர்களுக்கு முன் இருவரும் உரையாற்றினார்கள். முதலில் ஆன் இதால்கோ உரையாற்றினார். அவர் தெரிவிக்கும் போது ‘இந்த ஜனாதிபதி தேர்தலுடன், பிரான்ஸ் தனது மோசமான நிலையில் இருந்து மீண்டுள்ளது!’ என குறிப்பிட்டார். அதன் பின்னர் மக்ரோன் உரையாற்றினார். அதன் போது, ‘பரிஸ் பிரான்சின் இதயம். பரிஸ் என்ன சிந்திக்கிறதோ.. மொத்த பிரான்சும் அதன் தாக்கத்தையே உணரும். ஒவ்வொரு பிரெஞ்சு குடிமக்களுக்கும் பரிஸ் குறித்து பெருமைப்படவேண்டும்!’ என தெரிவித்தார்.

Comments

தொடர்புடைய செய்திகள்