Home / உலகம் / பிரான்ஸ் /

இம்மானுவல் மக்ரோனின் புதிய படை!!

Posted On : May 16, 2017
இம்மானுவல் மக்ரோன், ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், இன்று புதிய பிரதமரை அறிவிக்கின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக பல்வேறு பதவிகளில் பல புதியவர்களை நியமித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையின் புதிய பொதுச்செயலாளராக 44 வயதுடைய Alexis Kohler என்பவரை நியமித்துள்ளார். தவிர Patrice Strzoda என்பவரை தலைமை பணியாளராக நியமித்துள்ளார். 64 வயதுடைய இவர், பல அரச மட்டங்களில் பணியாற்றியவர் ஆவார். தவிர இவர் Brittany மாகாணதின் நிர்வாக அலுவலகராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் உள்துறை அமைச்சராக பெர்னாட் கசநவ் இருந்தபோது, இவர் தலைமைப் பணியாளராக இருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், புதிய அரசின் இராஜதந்திர ஆலோசகராக, 61 வயதுடைய Philippe Etienne என்பவரை நியமித்துள்ளார். தவிர பிரதான ஆலோசகராக, அரசியல் பட்டமாணி தகுதியுடன் உள்ள 30 வயதுடைய Ismaël Emelien என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பிரான்சின் புதிய பிரதமர் யார் எனும் கேள்வி மிக பரபரப்பாக பேசப்பட்டு வரும் வேகையில், பிரதமரை அறிவித்துவிட்டு, மக்ரோன், ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் பயணமாகிறார்.

Comments

தொடர்புடைய செய்திகள்