Home / உலகம் / ஐரோப்பா /

ஒருவேளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஸ்கொட்லாந்து உடனடியாக இணையாதிருக்கலாம்

Posted On : May 16, 2017

பிரித்தானியாவிடமிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து சென்று விட்டால், ஒருவேளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடனடியாக இணையாதிருக்கலாம் என ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து பிரித்தானியா விலகிச் செல்லும் அதே நேரம் பிரித்தானியாவிடமிருந்தும் ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) சர்வதேச ஊடகம் ஒன்றினால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், ஸ்கொட்லாந்து மக்களின் விருப்பத்திற்கு எதிராகவே பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் உரையாற்றிய அவர், “ஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்கொட்லாந்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதே சமயம் ஸ்கொட்லாந்தில் இரண்டாவது கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது தொடர்பில் இந்த காலகட்டத்தில் அக்கறை செலுத்தப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

Comments

தொடர்புடைய செய்திகள்