Home / உலகம் / பிரான்ஸ் /

காவல்துறையினர் துரத்தலின் போது உயிரிழந்த இளைஞன் – கண்டன ஆர்ப்பாட்டம்!!

Posted On : May 16, 2017
நேற்று  200 தொடக்கம் 300 வரையான மக்கள் வெள்ளை உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 5 ஆம் திஜதி காவல்துறையினரின் துரத்தலின் போது உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கேட்டு, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டம் Massy ( ​​Essonne ) நகரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கடந்த ஐந்தாம் திகதி Antony (Hauts-de-Seine)  நகரில், கொள்ளையர்கள் சிலரை கண்காணிப்பு மகிழுந்து மூலம் காவல்துறையினர் துரத்திச்சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாரா விதமாக 17 வயது இளைஞன் ஒருவனை காவல்துறையினரின் கண்காணிப்பு மகிழுந்து மோதி எறிந்துள்ளது. ஒரு ஒரு விபத்து என பதியப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததாகவும், காவல்துறையினரின் மகிழுந்தில் மோதி, பேருந்து ஒன்றுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்தே நேற்று ஞாயிற்றுக்கிழமை புதிய ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. ‘காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமான உறவு எப்போதுமே சிக்கலாகவே உள்ளது!’ என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.

Comments

தொடர்புடைய செய்திகள்