Home / உலகம் / சுவிஸ் /

சுவிஸில் பொலிஸ் உயர் அதிகாரி மர்ம மரணம்: கொலையா? தற்கொலையா?

Posted On : May 16, 2017

சுவிட்சர்லாந்து நாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் உள்ள Neuchatel மாகாணத்தை சேர்ந்த Olivier Gueniat(50) என்ற பொலிஸ் அதிகாரி குற்ற விசாரணைப்பிரிவு துறை தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.

முன்னதாக யூரா மாகாணத்தில் பொலிஸ் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் கடந்த 1997-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று Neuchatel மாகாண பொலிஸ் துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், Fresens நகரில் உள்ள வீட்டில் அவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சடலத்தை கைப்பற்றிய பொலிசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

எனினும், இம்மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து இதுவரை உறுதியாக தகவல்கள் வெளியாகவில்லை.

ஆனால், மாகாண பொலிசார் வெளியிட்ட தகவலில் ‘இது தற்கொலையாக தான் இருக்க வாய்ப்புள்ளது’ என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் காவல் துறையில் சேர்ந்து பல்வேறு சாதனைகள் படைத்தது மட்டுமின்றி குற்றங்களை தடுப்பது எப்படி என்பது தொடர்பான புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.

பொலிஸ் அதிகாரியின் மரணத்திற்கு சுவிஸ் பத்திரிகைகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்