Home / சினிமா / ஹாலிவுட் /

தமிழில் வெளிவருகிறது பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் படம்

Posted On : May 16, 2017

தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா, தமிழ் சினிமாவால் புறக்கணிக்கப்பட்டு பாலிவுட் நடிகை ஆனார். தற்போது ஹாலிவுட் நடிகையாக வளர்ந்திருக்கிறார்.

அவர் தற்போது நடித்திருக்கும் ஹாலிவுட் படம் பேவாட்ச். இதில் அவர் டுவைன் ஜான்சன் ஜோடியாக நடிக்கிறார். ஹெர்குலஸ், பாஸ்டர், பாஸ்ட் அண்ட் பியூரியஸ், ஜி.ஐ.ஜோ உள்ளிட்ட பிரபலமான ஹாலிவுட் படங்களின் ஹீரோ அவர். இவர்களுடன் ஜாக் எப்ரான், அலெக்சாண்ட்ரியா டெட்டோரியா, கெல்லி ரோஹர்பேச், ஜான் பாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிறிஸ்டோபர் லெண்டஸ் இசை அமைத்துள்ளார், நியூயார்க் டோல், தி கிங் ஆப் கிங், ஃபோர் கிறிஸ்துமஸ், பிக்சஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய சேத் கார்டன் இயக்கிய உள்ளார்.

இது தீவிரவாதிகள், மற்றும் சமூக விரோதிகளை விரட்டி பிடிக்கும் கடற்கரை காவல் வீரர்கள் பற்றிய கதை. அந்த டீமில் ஒரு வீராங்கணையாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். பிகினி உடை, லிப் லாக் கிஸ் என கிறங்கடிக்கிறார் பிரியங்கா. பேரமவுண்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற ஜுன் 2 தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது. இந்தியாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. தமிழில் ஹியூபாக்ஸ் ஸ்டூடியோ வெளியிடுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்