Home / உலகம் / பிரான்ஸ் /

பிரான்ஸில் நாளை கேன்ஸ் திரைப்பட விழா: பாதுகாப்பு அதிகரிப்பு

Posted On : May 16, 2017

பிரான்ஸின் கேன்ஸ் (Cannes) நகரில் நாளை (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ள உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் பொருட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விழாவுக்கு வருகை தருவோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்  சுமார் 550 பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் டிரக் வண்டிகள் உள்ளே வருவதை தடுக்கும் வகையில் சுமார் 160 மீட்டர்கள் நீளமுடைய பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டுள்ளதாகவும் சந்தேகிக்கும் வகையில் எவரேனும் செயற்படும் பட்சத்தில் அது தொடர்பில் தகவல் தெரிவிக்க பல தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் நீஸ் நகரில் கடந்த வருடம் ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியின் பொருட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்