Home / உலகம் / ஐரோப்பா /

ஸ்கொட்லாந்து தேசியக் கட்சிக்கு ஆதரவு கோருகிறார் நிக்கோலா ஸ்ரேர்ஜன்

Posted On : May 16, 2017

பிரித்தானிய பொதுத் தேர்தலில் ஸ்கொட்லாந்து தேசியக் கட்சிக்கு ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் அது பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்து தேசியக் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் பிரெக்சிற் பேச்சவார்த்தைகளின் போது அவர் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்தும் எனவும் நிக்கோலா தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பொதுத் தேர்தல் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றினால் நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் அதன் ஒற்றைச் சந்தையிலும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே ஸ்கொட்லாந்தின் விருப்பம்.

இருப்பினும், பிரித்தானியா ஒற்றைச் சந்தையை விட்டு விலகுவதால் ஸ்கொட்லாந்தும் விலகுவதே சிறந்தது என பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகுவது குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 62 சதவீதமான ஸ்கொட்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருக்க வேண்டும் எனவே வாக்களித்திருந்தனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்