Home / சினிமா / ஹாலிவுட் /

ஹேக்கர்களின் கையில் சிக்கிய ஹாலிவுட் திரைப்படம்: அச்சத்தில் தயாரிப்பாளர்

Posted On : May 16, 2017

சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சைபர் கிரைம் விவகாரத்தில் ஹேக்கர்களின் கையில் திரைக்கு வராத பிரபல ஹாலிவுட் திரைப்படம் ஒன்று சிக்கியுள்ளதாக தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார்.

சர்வதேச அளவில் ரேன்சம்வேர் எனக்குறிப்பிடப்படும் சைபர் கிரைம் நிகழ்ந்து வருவதால் இதுவரை சுமார் 150 நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

கணிணிகளுக்குள் நுழையும் சில மர்ம நபர்கள் முக்கிய தகவல்களை திருடிக்கொண்டு அதனை மீட்க பணம் கேட்டு மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகரான ஜானி டெப் நடித்த Pirates of the Caribbean: Salazar’s Revenge என்ற புதிய படம் ஹேக்கர்களின் கையில் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தை தயாரித்துள்ள டிஸ்னி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான Bob Iger இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ள அத்திரைப்படம் தங்களிடம் உள்ளதாகவும், கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் முழுப்படத்தையும் இணையத்தளத்தில் வெளியிடுவோம் என மிரட்டியுள்ளதாக Bob Iger தெரிவித்துள்ளார்.

எனினும், ஹேக்கர்கள் கேட்டுள்ள பணத்தை கொடுக்க மறுத்துள்ள டிஸ்னி நிறுவனம் தற்போது பொலிசாரிடம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்