Home / உலகம் / ஐரோப்பா /

எதிர்கால சந்ததியினர் வாழ்க்கையை Brexit சீரழிக்கும்: லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் பேட்டி

Posted On : May 17, 2017

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகுவது எதிர்கால சந்ததியினரின் வாழ்வை சீரழிப்பதாக அமையும் என லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டிம் ஃபரோன் கூறியுள்ளார்.

பிரித்தானிய லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டிம் ஃபரோன் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் அளித்துள்ள பேட்டியில், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற பட்சத்தில் அதை எதிர்க்க பொது மக்களுக்கு உரிமை உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளூர் சந்தையில் பிரித்தானியா நிலைத்திருப்பது வணிகத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இன்றியமையாதது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை சீரழித்து விடும் என தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்