Home / உலகம் / ஜேர்மனி /

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு எல்லை சோதனைகளை தீவிரப்படுத்த ஜேர்மன் நடவடிக்கை

Posted On : May 17, 2017

ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் இடம்பெறவுள்ள ஜி-20 மாநாட்டின் போது பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எல்லைகளின் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளதாக ஜேர்மன் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.

ஜி-20 மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் 7 மற்றும் 8 ஆகிய தினங்களில் ஜேர்மனியின் மிகப்பெரிய நகரான ஹம்பர்க்கில் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி பாதுகாப்பு திட்டம் குறித்து ஐரோப்பிய ஆணைக்குழு, ஐரோப்பிய கவுன்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஹம்பர்க் நகரம் ஆகியவற்றிற்கு உள்துறை அமைச்சரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்